Division of Event : Administration Programme
Date : 26-11-2024
Title of the Event : Pledge to Constitution Day of India
திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் 26.11.2024 அன்று காலை 11 மணியளவில் இந்திய அரசியலமைப்பு தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் அவர்கள் தலைமையில் இந்திய அரசியலமைப்பை சிறப்பிக்கும் வகையிலும் தனிமனித மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை நிலை நிறுத்தும் வகையிலும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந் நிகழ்வில் பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர். இந்த நிகழ்வை கல்லூரி அலுவலகம் ஏற்பாடு செய்தது.