Division of Event : Extension Activities
Date : 23-03-2023 to 29-03-2023
Organized by : National Service Scheme
Title of the Event :NSS Seven Days Camp
Village Names : Nedungulam, Thatchampathu, Thiruvedagam , Melakkal, Rishbam.
திருவேடகம், விவேகானந்த கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஏழு நாள் சிறப்பு முகாம் நிறைவு நிகழ்ச்சி
மதுரை திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அணி எண் 75, 76, 77, 78 மற்றும் 199 சார்பாக ஏழு நாள் சிறப்பு முகாம் 23.03.2023 முதல் 29.03.2023 வரை தட்சம்பத்து, நெடுங்குளம், ரிஷபம், மேலக்கால் மற்றும் திருவேடகத்தில் நடைபெற்றது. கிராமங்களில், நாட்டு நலப்பணித் திட்ட இரண்டாமாண்டு மாணவர்கள் பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டார்கள். குறிப்பாக, தூய்மை பணி, விழிப்புணர்வு பேரணி, மரக்கன்று நடுதல் மற்றும் புள்ளி விவரம் சேகரித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டார்கள். நிறைவு நாளான இன்று (29.03.2023), முனைவர். S. கண்ணன், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மாணவர்களுக்கு நிறைவு விழா சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில், முனைவர். T. வெங்கடேசன், முதல்வர், விவேகானந்த கல்லூரி தலைமையுரை ஆற்றினார்.
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள், முனைவர். G. அசோக்குமார், முனைவர். K. ரமேஷ்குமார், முனைவர். G. ராஜ்குமார், திரு. M. ரகு மற்றும் திரு. N. தினகரன் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
உதவி திட்ட அலுவலர்கள் முனைவர். B. மாரிமுத்து, முனைவர். B. ராஜா, முனைவர். S. செல்வராஜ், முனைவர். V.குமாரசாமி மற்றும் முனைவர். S. எல்லைராஜா இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள்.