logo

Division of Event                    : Awards & Recognitions

Date                                          : 24-10-2021

Name of the Award               :  Gold medals and Two silver medals – Silambam

Name of the student              : Mr. V. Arun Kumar

Department                             :  History

Award Given by                      : Tamil Nadu, Eesan Silambam Federation

மாநில அளவிலான சிலம்பம் குத்துவரிசை போட்டியில் திருவேடகம் விவேகானந்த கல்லூரி வெற்றி

கடந்த 22, 23 மற்றும் 24 அக்டோபர் 2021-ல் இரண்டாவது மாநில அளவிலான சிலம்பம் குத்துவரிசை போட்டி 2020-21, தமிழ்நாடு, ஈசன் சிலம்பாலயா கூட்டமைப்பு சார்பில் சென்னை அப்பல்லோ பொறியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் திருவேடகம் விவேகானந்த கல்லூரி முதலாமாண்டு படிக்கும் மாணவர் அருண்குமார் பங்குபெற்று இரண்டு தங்கப் பதக்கங்களையும் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளார். வேல் கம்பு மற்றும் நெடும் கம்பு சிலம்பப் போட்டியில் தங்கப்பதக்கங்களும் சுருள் அருவாள் மற்றும் நடு கம்பு சிலம்பப் போட்டியில் வெள்ளிப்பதக்கங்களும் வெற்றி பெற்றுள்ளார். மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் அருண்குமாரை கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த, முதல்வர் முனைவர் வெங்கடேசன் துணை முதல்வர் முனைவர் பார்த்தசாரதி, அகத்தர அமைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு, தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர் சஞ்சீவி, கல்லூரியின் விளையாட்டு இயக்குனர் முனைவர் சீனிமுருகன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.