College Anthem – Vivekananda College
logo

College Anthem

கல்லூரி (வாழ்த்து) கீதம்
வாழியவே வாழியவே வாழியவே வாழியவே
வாழிய வாழிய வாழியவே வாழிய வாழிய வாழியவே
விவேகானந்த கல்லூரி.

அழகிய வைகை நதிக்கரையில்
அன்பும் பண்பும் வளர்ந்திடவே
ஆக்கமும் ஊக்கமும் பெருகிடவே
அறிஞர் எல்லாம் போற்றி புகழ்ந்திடவே                     (வாழிய)

பசுமை நிறைந்த வயல் நடுவே
பாசமும் நேசமும் விளங்கிடவே
பக்தியும் நேர்மையும் பரவிடவே
பாவலர் அனைவரும் பாடி மகிழ்ந்திடவே                     (வாழிய)

திருஏடகநாதர் திருத்தலத்தில்
திறமையும் திண்மையும் ஓங்கிடவே
தியானமும் தியாகமும் திகழ்ந்திடவே
திக்கெல்லாம் புகழ் தினசரி பரவிடவே                     (வாழிய)