logo

Division of Event                     : Administration Programme

Date                                          :  17-08-2022

Title of the Event                    : Azadi Ka Amrit Mahotsav

“ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்” – 75 வது சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் 11-8-2022 முதல் 17-8-2022 வரை தொடர் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் பிரார்த்தனை கூடத்தில் நடைபெறுகின்றன. எழாம் நாள் நிகழ்ச்சி இன்று (17-8-2022) நடைபெற்றது. தமிழ் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் திரு. முருகன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமை உரை ஆற்றினார். செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த, துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன், மற்றும் முதன்மையர் முனைவர் சஞ்சீவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர் G.பாலமுருகன் விடுதலை போராட்ட வீரர் கக்கன் என்ற தலைப்பிலும், முதலாம் ஆண்டு இயற்பியல் துறை மாணவர் செல்வன் G.இராமர் விடுதலைப் போராட்ட வீரர் வைத்தியநாத ஐயர் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர். பொருளியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் அருள்மாறன் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சி நாட்டுப்பண்ணுடன் நிறைவு பெற்றது.