Division of Event : Administration Programme
Date : 13-08-2022
திருவேடகம் விவேகானந்த கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் தூய்மை பணி இன்று (13-8-2022) *- 75 வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு திருவேடகம் விவேகானந்த கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சோழவந்தான் பேரூராட்சி அறிவுத்தலின் பேரில் தூய்மைக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சோழவந்தான் ஶ்ரீ ஜெனகைமரியம்மன் கோவில், ஶ்ரீ ஜெனக நாராயண பெருமாள் கோவில் மற்றும் சோழவந்தான் பேருந்து நிலையம் தூய்மை பணி மேற்கொண்டனர். கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட பொறுப்பு ஆசிரியர்கள் திரு. இரகு, முனைவர்.செல்வராஜ் மற்றும் திரு.செல்வகுமார் ஆகியோர் மாணவர்களுடன் தூய்மை பணியை மேற்கொண்டனர். சோழவந்தான் பேரூராட்சி சேர்மன் திரு.எஸ்.எஸ்.கே. ஜெயராமன், திருவேடகம் விவேகானந்தா கல்லூரி முதல்வர் வெங்கடேசன், சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் திரு மு சுதர்சன், சோழவந்தான் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் திரு. முருகானந்தம் மற்றும் விவேகானந்த கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரிகள் முனைவர் அசோக்குமார், முனைவர் ராஜ்குமார், திரு.தினகரன், முனைவர் ரமேஷ்குமார் மற்றும் சோழவந்தான் பேரூராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.