Division of Event : Sports
Date : 27-07-2022
Title of the Event : 44th Chess Olympiad 2022 Celebration – Quiz Competition
Time : 06.30 p.m to 08.00 p.m
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் 44வது சதுரங்க ஒலிம்பியாட் 2022
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் உடற்கல்வி துறை சார்பில் 44வது சதுரங்க ஒலிம்பியாட் 2022 கொண்டாடும் வகையில் கல்லூரியின் பிரார்த்தனை மண்டபத்தில் சதுரங்க போட்டியும் வினாடி வினா போட்டியும் நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்துகொள்ள விரும்பிய 42 மாணவர்கள் கலந்து கொண்டனர். கல்லூரியின் முதல்வர் தி.வெங்கடேசன் போட்டியினை துவக்கி வைத்து பேசினார். செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த மற்றும் அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குனர் சீனிமுருகன் போட்டியிட்ட மாணவர்களை ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் தோல்வியுற்றவர்களை வெளியேற்றும் முறையில் வெற்றிபெற்றவர்களை தேர்வு செய்தார். சதுரங்க போட்டியில் கணிதத் துறை மாணவர் விக்னேஷ் குமார் முதலாம் இடத்தையும் பொருளியல் துறை மாணவர் தினேஷ் குமார் இரண்டாம் இடத்தையும் இயற்பியல் துறை மாணவர் விஷ்ணுசுந்தர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். இதனைத் தொடர்ந்து வினாடி வினா போட்டி மாணவர்களுக்கு நடைபெற்றது. வேதியியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் ராஜ்குமார் வினாடி வினா போட்டியினை மாணவர்களுக்கு நடத்தினார். ஐந்து அணிகளாக மாணவர்கள் பங்கு பெற்றனர். வினாடி வினா போட்டியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் கிரண் குமார் மற்றும் ஈஸ்வரன் முதலாம் இடத்தை பிடித்தனர். மூன்றாம் ஆண்டு மாணவர்கள் முரளி மற்றும் மாரி விக்னேஷ் இரண்டாம் இடத்தை பிடித்தனர். முதலாம் ஆண்டு மாணவர்கள் ராம்குமார் மற்றும் சங்குமித்திரன் மூன்றாம் இடத்தை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை அனைவரும் பாராட்டினர்.